குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ- வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

0 1759

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெடேவாலாவுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் சில மணி நேரத்திற்கு முன்பு முதலமைச்சர் விஜய் ரூபானி, உயர் அதிகாரிகள் சிலரை சந்தித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எம்.எல்.ஏ.வை கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் பங்கேற்றதால் அக்கூட்டத்தில் இருந்த முதலமைச்சர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர் ,மாநகராட்சி ஆணையர் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனையடுத்து இம்ரான் மற்றும் அவருடன் வந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இல்லத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பேணப்பட்டதால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் மருத்துவர்களின் ஆலோசனையை குஜராத் அரசு நாடியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments