zoom செயலியில் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருட்டு

0 14202

 வீடியோ கான்பரசிங் செயலியான ஜூம் செயலியின் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்ட சில நாட்களில், ஜூம் தளம், இந்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை கோடியை எட்டியது. இந்த நிலையில் ஜூம் தளத்தைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனாளர்களின் பெயர், கடவுச் சொல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. டார்க் வெப் எனப்படும் கண்டுபிடிக்க இயலாத இருள்வலை தளத்தினால் திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயனாளரின் கணக்கும் வெறும் 15 பைசா அளவிற்கு சர்வதேச வலைதளங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு ஜூம் செயலியை பயன்படுத்த மறுத்துவிட்டது. ஜெர்மனி, தைவான், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூரிலும் ஜூம் தடை செய்யப்பட்டுள்ளது. கூகுள், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, நாசா மற்றும் நியூயார்க்கின் கல்வி நிறுவனம் ஆகியவைகளும் ஜூம் தளத்தின் பயன்பாட்டை தடை செய்துள்ளன. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments