சிறந்த எதிர்காலம் அமைய தற்போதைய கடின சூழலை மக்கள் எதிர்கொள்ள வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்
சிறந்த எதிர்காலம் அமைய வேண்டுமானால், தற்போதைய கடினமான சூழலை மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தற்போதைய இக்கட்டான சூழலில் ஊரடங்கை நீட்டிப்பதே மிகச் சரியான முடிவு என்றார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்குத் தேவையான உதவிகள் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கைக் கடைப்பிடிப்பதில் மக்கள் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 21 நாள்கள் அமலில் இருந்த ஊரடங்கால் பெற்ற பலன்கள் மேலும் தொடர வேண்டும் என்றார்.
Comments