ஊரடங்கை மதித்து இருக்கும் இடத்திலேயே இருக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

0 1007

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மும்பை பாந்த்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டார். மும்பையைப் போல் ஒரு சூழ்நிலை டெல்லியிலும் அதன் அண்டை மாநில நகரங்களிலும் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்புவதற்காக பேருந்துகள் இயக்கப்படுவதை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த விளக்கத்தை கெஜ்ரிவால் வெளியிட்டார். பேருந்துகள் இயக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட கெஜ்ரிவால் இப்போதைய சூழ்நிலையில் யாரும் உங்களை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல வழியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments