கொரோனாவின் தீவிரத்தை 3 வண்ணங்களில் குறிப்பிடும் சுகாதாரத்துறை

0 4104

தமிழ்நாட்டில், அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் அதிதீவிரத்தை உணர்த்தும் வகையில், சிகப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள சென்னையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை, மாவட்டங்கள் வாரியாக வெளியிட்டிருக்கும் சுகாதாரத்துறை, அதன் தீவிரத்தை, மூன்று வெவ்வேறு வண்ணங்களில் குறிப்பிட்டு, அறிவித்திருக்கிறது.இதன்படி, ஒரே நாளில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில், 9 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும் கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழ்நாட்டில், மாவட்ட அளவில், சென்னை பெருநகரம், தொடர்ந்து, பல நாட்களாக முதலிடத்தில் உள்ளது. சென்னையில், 211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 126 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 79 பேருக்கும், திண்டுக்கல்லில் 65 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு, அதிதீவிரமாக உள்ள மாவட்டங்களை, சிவப்பு வண்ணத்தில் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பு, அதிதீவிரமாக உள்ள மாவட்டங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களாக, கடலூர், சேலம், திருப்பத்தூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீலகிரி, காஞ்சிபுரம், தென்காசி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பு மிதமான அளவில் உள்ளதை குறிக்கும் வகையில், மஞ்சள் வண்ணத்தில், குறிப்பிட்டு, தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments