"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
உதவித் தொகையை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திய தெலங்கானா அரசு
தெலங்கானா அரசு 74 லட்சம் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஒரு குடும்பத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும், 12 கிலோ அரிசியும் வழங்கப்படும் எனத் தெலங்கானா அரசு அறிவித்தது.
இந்நிலையில் 74 லட்சம் குடும்பங்களுக்கு இன்று ஒரேநாளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1500 ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 112 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது. தெலங்கானாவில் மொத்தம் ஒரு கோடியே 3 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் 76 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பு அட்டைகள் வைத்துள்ளனர்.
Comments