ஊரடங்கு முடிந்த பின்னர் கார் விற்பனை அதிகரிக்கும்-மாருதி நம்பிக்கை
ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றின் பின்னணியில் சமூக இடைவெளி என்பது இனி கடைப்பிடிக்கப்படும் என்பதால் பலர் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து கார்களை வாங்கத் துவங்குவார்கள் என நம்பிக்கை பிறந்துள்ளதாக மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கிற்குப் பிறகு பொருள்களை வாங்கும் மக்களின் மனோபாவத்திலும் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதால் விற்பனை அதிகரிக்கும் எனவும் மாருதி நம்புகிறது. அதே சமயம் குறைந்த அளவு பணியாளர்களை வைத்த உற்பத்தியை திட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் பார்கவா தெரிவித்திருக்கிறார்.
Comments