பிரதமர் இல்லத்தில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

0 1407

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நாளை நடைபெற உள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளியோர், தொழிலாளர்கள் ஆகியோரின் இன்னலைக் குறைக்கப் புதிய சலுகைகள் அறிவிப்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நிலுவைகளைச் செலுத்தவும் பொறுப்புகளை நிறைவேற்றவும் தவறும் நிறுவனங்களின் மீது திவால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கத் திவால் சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசரச் சட்டத்துக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments