சென்னையில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம்

0 3041

சென்னையில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது.

சென்னையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாது வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 179ஆவது பிரிவின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோருக்கு 500 ரூபாய் அபராதத்தை போக்குவரத்து போலீசார் விதித்து வருகின்றனர். இதேபோல் அவர்களின் வாகனத்தையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments