ஊரடங்கு நீட்டிப்பால் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பிரதமரின் 7 கட்டளைகள்

0 3906

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் கட்டாயம் பின்பற்றுவதற்காக 7 கட்டளைகளையும் அறிவித்துள்ளார்.

அதன்படி வீட்டிலுள்ள முதியவர்கள் மீது கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும், தனிநபர்  இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவதோடு, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற அறிவுறுத்திய அவர், ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும், இயன்ற அளவுக்கு இயலாதவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,  மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வரும் அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

1. வீட்டிலுள்ள முதியவர்கள் மீது கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும்

2. தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்; வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை அணிய வேண்டும்

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்

4. ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும்

5. இயன்ற அளவுக்கு இயலாதவர்களுக்கு உதவி புரிய வேண்டும்

6. பணியாளர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யக்கூடாது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

7. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வரும் அனைவரையும் மதிக்க வேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments