6 நாட்களில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை

0 4308

இந்தியாவில் கடந்த ஆறே நாட்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 536ஆக மட்டுமே இருந்தது. பிறகு ஒரே வாரத்தில் 4 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து ஏப்ரல் 2ம் தேதி 2 ஆயிரத்து 520ஆக உயர்ந்தது.

இதற்கடுத்த 5 நாள்கள் கழித்து ஏப்ரல் 7ம் தேதி இந்த எண்ணிக்கை 2 மடங்குக்கும் கூடுதலாக உயர்ந்து 5 ஆயிரத்து 305ஆக பதிவானது. அதே சமயம் கடந்த ஆறே நாளில் தொற்று எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து 10 ஆயிரத்து 363ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து இந்தியாவில் இதுவரை 339 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments