தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்த ஸ்பைஸ் ஜெட் சிறப்பு ஏற்பாடுகள்

0 5765

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள், பேருந்துகளில் தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் பெருக்கல் குறியில் டேப்புகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளில் எவரும் அமர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று விமானத்தில் ஏற அதன் படிக்கட்டுகளில் பயணிகள் காத்திருக்கும் போது இரண்டு படிக்கட்டுகளுக்கு ஒருவர் நிற்கும் வகையில் எண்கள் இடப்பட்டு தனி மனித இடைவெளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் விமான சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments