கொரோனா தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது ? முதியோர்களுக்கு அறிவுறுத்தல்
கொரோனா தாக்கத்தை முன்னிட்டு மத்திய அரசு முதியோருக்கான அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.
மத்திய சமூக நீதி அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 16 கோடி பேர் இருப்பதாகவும், அவர்களின் உடற்கூறியல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சாத்தியக் கூறு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா அறிகுறிகள் இருப்பவர்கள் அருகில் செல்லக் கூடாது, கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லக் கூடாது, வெறும் கையால் மூடிக்கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது, சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும், வழக்கமான மருத்துவ சோதனைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்லக் கூடாது தனிமையை எதிர்கொள்ள புகையிலை மது உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Comments