பிரான்சின் விமானம் தாங்கிக் கப்பல் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று

0 1132

பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதியானதால் எஞ்சிய மாலுமிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டு போர்க்கப்பல்களுடன் கூட்டுப் பயிற்சியில் பிரான்சின் விமானம் தாங்கிக் கப்பலான சார்லஸ் டி கல்லியும் ஈடுபட்டது.

இந்தக் கப்பலில் மாலுமிகள், விமானிகள், ஊழியர்கள் என 2 ஆயிரத்து 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கப்பலில் பணியாற்றிய 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரான்சின் டவ்லான் துறைமுகத்தில் சார்லஸ் கப்பல் அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர. எஞ்சியவர்கள் வெளியேற்றப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments