கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கூகுள் பேயில் புதிய வசதி
கொரோனா ஊரடங்கை முன்னிட்டு மக்கள் உள்ளூரில் திறந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகளை தெரிந்துகொள்ளும் வகையில் கூகுள் பே-யில் "நியர்பை ஸ்பாட்" என்ற பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூர் மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள நியர்பை ஸ்பாட் பகுதியில் அங்கு திறந்திருக்கும் எந்தெந்தக் கடைகளில் எந்தெந்த அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தைத் தெரிந்துகொண்டு அவற்றை கூகுள் பே மூலம் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி விரைவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கொரோனா தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்து கோவிட் 19 ஸ்பாட் என்ற பகுதியும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதமர் நிவாரண நிதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments