சீனாவுக்கு மாற்றாக மருந்து உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முடிவு
மருந்து ஏற்றுமதியில் சீனாவிற்கு மாற்றாக உருவெடுக்க மருந்துப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் மருத்துவ உதவியை எதிர்பார்த்து நிற்கின்றன.
இந்நிலையில் இந்தியாவுக்குத் தேவையான 70 விழுக்காடு மருந்துகள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் சீனாவே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அத்தியாவசியத் தேவையான 373 மருந்துகளில் கிட்டத்தட்ட 200 மருந்துகள்அங்கிருந்து தான் இறக்குமதியாகின்றன.
தற்போது கொரோனா தொற்றின் காரணமாக சீனாவின் மருந்து தயாரிப்பு ஆலைகள் செயலிழந்துள்ளன. எனவே சீனாவுக்கு மாற்றாக மருந்து உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதி செய்வது என இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவுத் திட்டங்கள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments