ரமலான் பண்டிகை மாதத்தில் முஸ்லிம்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

0 1959

ரமலான் பண்டிகை மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு வழிகாட்டுதல்களையும், தனி மனித இடைவெளியையும் கடுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மத்திய  அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பேசிய அவர் இந்தியா முழுவதும் மாநில வக்பு வாரியங்களின் கீழ் 7 லட்சத்துக்கும் அதிகமான மசூதிகள், தர்காக்கள், ஈத்காக்கள், இமாம்பராக்கள் மற்றும் பிற சமய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ரமலான் காலத்தில் எந்த சூழலிலும் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது பிற இடங்களிலோ  ஒன்றுகூடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில வக்பு வாரியங்களுக்கு மத்திய வக்பு கவுன்சில் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தையொட்டி முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் காலம் வருகிற 24 அல்லது 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments