மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் சில்லரை விற்பனை கடைகள் - மத்திய அரசு திட்டம்
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
சுரக்சா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இன்னும் 45 நாட்களுக்குள் கடைகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒன்று அல்லது இரு மாநிலங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் அனுமதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கடைகளில் மளிகை சாமான்கள் மட்டுமின்றி நுகர்வோர் பொருட்கள், ஆடைகளும் விற்பனை செய்யப்படும்.இந்த சுரக்சா ஸ்டோர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளின்படி அமைக்கப்படும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார துறையின் செயலாளர் பவன்குமார் அகர்வால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Comments