கோவை மாவட்டத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம்
கோவை மாவட்டத்தில் முகக் கவசங்கள் இன்றி யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறவும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பிற தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள், பணிகளுக்குச் செல்லும் அரசுத் துறை அலுவலர், காவல்துறையினர் என அனைவருமே அரசு அறிவித்துள்ளபடி, பொது வெளியில் வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 126 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments