ஊரடங்கை அடுத்து துவங்குகிறது 61 நாள் மீன்பிடி தடை காலம்
ஊரடங்கை தொடர்ந்து, 61 நாள், மீன் பிடி தடைகாலம் உடனடியாக துவங்குவதால், தமிழகத்தில் மீனவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், மீன்பிடி தடை கால நாட்களை கணிசமாக குறைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதி வரை, மீன்பிடி தடைகாலம் என அறிவிக்கப் பட்டு உள்ளது. சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில், 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
Comments