உத்தரபிரதேசத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய ஆக்ரா
தாஜ்மஹாலுக்கு பெயர் போன ஆக்ரா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது.
மாநிலத்தின் முதல் கொரோனா தொற்று ஆக்ராவில் உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய சுகாதார அதிகாரிகள் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்தனர்.
இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் 550 பேருக்கு தொற்று பரவியதில் 140 பேர் ஆக்ராவைச் சேர்ந்தவர்கள் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஆக்ரா மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், ஆக்ரா நகரில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட ஹாட்ஸ்பாட்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
Comments