"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஓராண்டு ஊதியத்தில் 30 சதவீதத்தை அரசுக்கு வழங்க முன் வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர்கள்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 3 தேர்தல் ஆணையர்களும் தங்கள் ஓராண்டு ஊதியத்தில் 30 சதவீதத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சில படிகளில் 30 சதவீதத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்ற இரு ஆணையர்களான அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோரும் தங்கள் ஓராண்டு ஊதியத்தில் 30 சதவீதத்தை வழங்க தாங்களாக முன்வந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக தலைமை தேர்தல் ஆணையர்களும் 2.50 லட்ச ரூபாய் மாத ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments