தமிழகத்தில் ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் -வைகோ வேண்டுகோள்
தமிழகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழில்கள் அனைத்தும் முடங்கி மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனவே வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments