உயர்வுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம்

0 1256

வர்த்தக நேரத் துவக்கத்தில் சற்றே உயர்வுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 685 புள்ளிகள் சரிந்து 30 ஆயிரத்து 474 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஒரு கட்டத்தில் 180 புள்ளிகள் வரை சரிந்து 8 ஆயிரத்து 931 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.

பஜாஜ் பினான்ஸ், டைட்டன், மகிந்த்ரா & மகிந்த்ரா, ஓஎன்ஜிசி, மாருதி சுசூகி, சீ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகள் 4.81 சதவீதம் முதல் 13.45 சதவீதம் வரை சரிந்தன. அதே சமயம் டாக்டர் ரெட்டிஸ், சன்பார்மா, சிப்லா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சற்றே உயர்வுடன் வர்த்தகமாகின

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments