16 தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிப்பது ஆபத்தானது
ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது ஆபத்தானது என்றும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
உள்துறை அமைச்சகத்துக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள கடிதத்தை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் பல பகுதிகளில் வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கிலிருந்து 9 கோடி தொழிலாளர்கள் வெளியில் வந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என அன்புமணி எச்சரித்துள்ளார். எனவே உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி, விநியோகம் தவிர மற்ற எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments