சானிட்டைசர் உற்பத்தியில் இறங்கியுள்ள வாகனத் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா
வாகனத் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா, சானிட்டைசர் உற்பத்தியில் இறங்கியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்துக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் மகிந்திரா நிறுவனம் கையுறைகள், முகக்கவசங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவும் சுவாசக் கருவிகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் மகிந்திரா நிறுவனம் சானிட்டைசர் தயாரிப்பதற்கான உரிமத்தையும் பெற்றுத் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. இது நாட்டைத் தூய்மையாக வைத்திருப்பதில் தங்கள் நிறுவனத்தின் மற்றுமொரு பங்களிப்பாகும் என மகிந்திரா நிறுவனத்தின் அதிகாரி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
I join in to congratulate you and your team. You have shown you know how to ‘Rise’ to the occasion... https://t.co/SxbgdG7fIW
— anand mahindra (@anandmahindra) April 12, 2020
Comments