போர்விமானங்களுக்கான எஞ்சின்களை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ரஷ்யாவில் போர்விமானங்களுக்கான எஞ்சின்களை பயன்படுத்தி வீதி தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த ரஷ்யாவில் தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்நாட்டில் 13,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் போர்விமான எஞ்சின்களை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அதிகளவில் வரும் கிருமிநாசினி புகையால் குறைந்த நேரத்தில் பரவலான பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க முடிகிறது.
Comments