நாகாலாந்தில் முதலாவது கொரோனா தொற்று உறுதி

0 1164

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதலாவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் தொற்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நாகாலாந்து மாநிலம் திமாபூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது.

நாகாலாந்தில் கொரோனா ஆய்வக வசதி இல்லாததால், குவஹாத்தி மருத்துவ கல்லூரி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. பின்னர் அவர் குவஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் சேர்க்கப்பட்டதாக மாநில நாகாலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments