இத்தாலியில் 3 வாரங்களுக்குப் பிறகு குறைவான உயிரிழப்பு

0 3187

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 3 வாரங்களுக்குப் பிறகு அங்கு நேற்று  இறப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்தது.

எனினும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 19,899 ஆக அதிகரித்துள்ளது.  இத்தாலியில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் , அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் அங்கு கொரோனா தொற்று உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.  அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டமும் படிப்படியாக குறையத் துவங்கி உள்ளது. அரசு புள்ளிவிவரங்களின் படி இத்தாலியில் 1,02,253 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments