கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான "ஆரோக்கிய சேது" ஆப் இந்தியா வழிகாட்டியாக திகழ்கிறது - உலக வங்கி பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு "ஆரோக்கிய சேது" ஆப் வெளியிட்டதன் மூலம், இந்தியா வழிகாட்டியாக திகழ்கிறது என உலக வங்கி கூறியுள்ளது.
இந்த ஆப் வெளியிடப்பட்ட பிறகே, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், மொபைல்போனில் பயன்படுத்தும் வகையில், கொரோனா தொடர்புகளை தடமறியும் மென்பொருளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தன.
ஆரோக்கிய சேதுவை பின்பற்றி, தொடர்புகளை தடமறியும் மென்பொருளை உருவாக்கும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு நிதி ஆயோக் சிஇஓ அமிதாப்காந்த் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவை உதாரணம் காட்டி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமும் மேற்கொள்ள முடியும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஆரோக்கிய சேது ஆப் மூலம் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்களை ஸ்மார்ட்போன் லொக்கேஷன் மூலம் இந்த ஆப் கண்டறிகிறது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
Comments