சீனாவில் 2 ஆம் கட்ட கொரோனா அலை வீசும் ஆபத்து
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சீனாவில் நேற்று அதிகபட்சமாக 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 2 ஆம் கட்ட கொரோனா அலை வீசும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்நாட்டு பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்களால் மீண்டும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதித்த 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என சீனாவின தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் பலர் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் கொரோனா தொற்றை பரப்புவதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஷ்யாவை ஒட்டியுள்ள ஹைலோஜியாங் (Heilongjiang) மாகாணத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 56 தொற்றுகளில் 49 பேர் ரஷ்யாவில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பதால் எல்லைகளில் கட்டுப்பாட்டை சீனா அதிகரித்துள்ளது.
Comments