இன்றியமையாப் பொருட்களின் போக்குவரத்தை உறுதிசெய்யும்படி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
ஊரடங்கு விதிகளை முறையாகப் பின்பற்றி இன்றியமையாப் பொருட்களின் போக்குவரத்தை உறுதிசெய்யும்படி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்துக்குள்ளேயும், மாநிலங்களுக்கிடையேயும் இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி இயங்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிடங்குகள், பண்டகசாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தடையின்றிச் சென்றுவருவதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தியுள்ளது. சரக்கு வாகனங்கள் செல்வதற்காக ஒரு மாநிலத்தில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டை மற்ற மாநிலங்கள் மதித்து அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சரக்குகளை இறக்கிவிட்டுச் சொந்த ஊருக்கு லாரி ஓட்டுநர்கள் செல்வதற்கு உள்ளூர் நிர்வாகத்தினர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments