கொரோனோ வைரசின் மரபியல் கூறுகள் 4 மீட்டர் வரை காற்றில் பரவும் -ஆய்வு

0 2456

கொரோனோ வைரசின் மரபியல் கூறுகள் 4 மீட்டர் தொலைவு வரை காற்றில் பரவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளை கையாளும் மருத்துவப் பணியாளர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா துவங்கிய வூகான் நகர மருத்துவமனைகளின் அவசர சிக்கிச்சைப் பிரிவுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின் Emerging Infectious Diseases என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.

காலணிகள்,அடிக்கடி தொடப்படும் கதவு பிடிகள், படுக்கை விரிப்புகள், கம்ப்யூட்டர் மவுசுகள், குப்பைக் கூடைகள் உள்ளிட்டவற்றிலும் கொரோனா வைரசுகளின் மரபியல் கூறுகள் காணப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயம் கொரோனா வைரசின் இந்த மரபியல் கூறுகளுக்கு நோயை பரப்பும் திறன் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments