கோடை வெப்பம் அதிகரிப்பு 104 டிகிரியை எட்டியது வெப்பநிலை
கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், சில இடங்களில் வெயிலின் தாக்கம் 104 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது.
மத்தியப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களும் கடும் வெப்ப நிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் கட்ச் , அகமதாபாத், புஜ். போன்ற பகுதிகளிலும் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் போன்ற பல நகரங்களில் வெயில் 104 டிகிரியைக் கடந்துள்ளது. மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெப்பச் சலனத்தால் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments