டெல்லியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 43 ஆக உயர்வு
தெற்கு டெல்லியில் பல பகுதிகள் கொரோனா பரவலுக்கு காரணமாக கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில், அருகில் உள்ள 12 மண்டலங்களிலும் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தப் பகுதிகளையும் தனிமைப்படுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வர முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியின் தடை செய்யப்பட்ட பகுதிகள் 43 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் மருந்துக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
Comments