தமிழகத்தில் 8 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்- தமிழக சுகாதாரத்துறை

0 2346

தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 செவிலியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில், 2 பேர், மாநில அரசின் மருத்துவர்கள். 2 பேர் ரெயில்வே மருத்துவர்கள்
என கூறிய தமிழக சுகாதாரத்துறை, எஞ்சிய 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் என விளக்கம் அளித்துள்ளது.

இதுதவிர, 5 செவிலியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments