வைரஸ் தொற்று பரவ, திமுக காரணம் : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி புகார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு திமுக தான் காரணம் என்று மீன் வளத் துறை அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசு மீது அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, சென்னை - பட்டினப் பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மு.க. ஸ்டாலின் குதர்க்க எண்ணத்துடன் விமர்சித்து வருவதாகவும் அவர் வெளியிட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாது என்றும் அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Comments