"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
13 நாடுகளுக்கு மலேரியா மாத்திரை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல்
13 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் தத்தாவாலியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யச் சில நாடுகள் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவது பற்றி அரசு கலந்தாய்வு செய்ததாகத் தெரிவித்தார். அதன் முடிவில் 13 நாடுகளுக்கு மாத்திரை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, டொமினிக்கன் குடியரசு, பிரேசில், பக்ரைன், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Comments