முகக் கவசத்தை சரியான முறையில் அணிவது எப்படி?
கொரோனா முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிபவர்கள் அதை சரியான முறையில் அணிய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.முகக் கவசத்தின் மேற்பகுதி மூக்கை முழுமையாக மறைக்கும் விதமாக உயர்த்தி அணிய வேண்டும். முகக் கவசத்தின் கீழ்ப்பகுதி முழுமையாக இறக்கி தாடையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் முகத்தை ஒட்டி இறுக்கமாக அணிய வேண்டும். இடைவெளியுடன் அணியக் கூடாது.
முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பாகவும் அணிந்துகொண்ட பிறகும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். முகக் கவசத்தைப் பொருத்திக் கொள்வதற்காக உள்ள எலாஸ்டிக் அல்லது கயிற்றின் நுனி பாகத்தை மட்டுமே தொட்டு அதனை அணியவும் அகற்றவும் வேண்டும். முகக் கவசத்தை அகற்றும்போது அதன் நடுப்பகுதியை தொடக் கூடாது. துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால், அதனை தினமும் சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.
Comments