கொரோனா பலி : உடல்களை கையாளும் வழிமுறைகள் வெளியீடு
கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ கைகளால் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என, இறந்தவர் உடல்களை கையாளும் பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை குளிப்பாட்டுதல், தொடுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் உள்ளிட்டவற்றை அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், இறந்தவரின் முகத்தை மட்டும் அவர்களின் குடும்பத்தினர் - உறவினர்களுக்கு காட்டலாம் என்றும், மத சடங்குகளை செய்ய அனுமதிப்பதில் எந்த தவறும் கிடையாது என்றும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தகனம் செய்த பின், இறந்தவரின்சாம்பலை மத சடங்கு களுக்காக குடும்பத்தினரிடம் வழங்கலாம். தகனம் அல்லது அடக்கம் நிகழும் இடத்தில் குடும் பத்தினர் - நெருங்கிய உறவினர்கள் தவிர, வேறுயாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் பணியாளர்களுக்கு, சுகாதாரத்துறை, திட்டவட்டமாக அறிவுறுத்தி உள்ளது.
Comments