கொரோனா நோயாளிக்குப் பிளாஸ்மா தெரபியைச் சோதிக்க ICMR விடம் அனுமதி கோரும் மாநிலங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கும் முறையைச் சோதித்துப் பார்க்க மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அனுமதியைத் தமிழ்நாடு உட்படப் பல்வேறு மாநிலங்கள் கோரியுள்ளன.
கொரோனா தொற்று குணமானவரின் ரத்த பிளாஸ்மாவில் கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பாற்றல் இருக்கும். இந்த எதிர்ப்பாற்றல் கொண்ட பிளாஸ்மாவைக் கொரோனா பாதிப்புள்ளோரின் உடலில் செலுத்தி அவருக்கு எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திக் குணமாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சிகிச்சையைச் சோதித்துப் பார்க்க மத்திய நலவாழ்வுத்துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஒப்புதலைப் பெறத் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், டெல்லி மாநிலங்கள் விண்ணப்பித்துள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் சோதனை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
Comments