கொரோனா நோயாளிக்குப் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கலாம் எனக் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கும் முறையைச் சோதித்துப் பார்க்க மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அனுமதியைச் சென்னை மருத்துவக் கல்லூரி கோரியுள்ளது.
கொரோனா தொற்று குணமானவரின் ரத்த பிளாஸ்மாவில் கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பாற்றல் இருக்கும். இந்த எதிர்ப்பாற்றல் கொண்ட பிளாஸ்மாவைக் கொரோனா பாதிப்புள்ளோரின் உடலில் செலுத்தி அவருக்கு எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திக் குணமாக்கலாம் எனச் சென்னை மருத்துவக் கல்லூரியின் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சிகிச்சையைச் சோதித்துப் பார்க்க மத்திய நலவாழ்வுத்துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஒப்புதலைக் கோரியுள்ளதாக டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான 23 ஆராய்ச்சி கட்டுரைகளை மருத்துவ ஆராய்ச்சிக் குழுவில் வழங்கச் சென்னை மருத்துவக் கல்லூரி ஒப்புதல் வழங்கியுள்ளது.
Comments