6.93 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்ட 2000 ரூபாய்
பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 6 கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என்கிற கணக்கில் செலுத்தப்படும்.
கொரோனாவால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் நாடு முழுவதும் 6 கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய இரண்டாயிரம் ரூபாய், முன்கூட்டி ஏப்ரல் மாதத்திலேயே அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 855 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments