நியூஜெர்சியில் வென்டிலேட்டர் தட்டுப்பாடு
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு ஏற்கெனவே சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள் போக, மீதம் 61 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்குக்கு அடுத்து நியூஜெர்சி மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தில் மட்டும் ஆயிரத்து 650 பேருக்கு, வென்டிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக 61 வென்டிலேட்டர்கள் மட்டுமே மீதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த வென்டிலேட்டர்கள் போதாது என்பதால், நியூஜெர்சி மாகாணத்திலுள்ள மருத்துவ துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். இதை கவனத்தில் கொண்டு, மத்திய தொகுப்பில் இருந்து 2 ஆயிரத்து 500 வென்டிலேட்டர்களை நியூஜெர்சி கோரியுள்ளது.
Comments