முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியாக கருதி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதியை கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியாக கருதி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். அதனை கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியாக கருத்தில் கொண்டு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட உபகரணங்கள், மருத்துவ உட்கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்க இந்த நிதியை தமிழக அரசு பயன்படுத்த உள்ளது.
Comments