என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.3,000 கோடி, பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க, 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் உடனான அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு விரைந்து பரிசோதனைகளை மேற்கொள்ள, தமிழகத்திற்கு 2 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 9 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
Comments