கொரோனா எதிரொலி: ரஷ்யாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்
கொரோனா பரவல் காரணமாக ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக வெண்டிலேட்டர்கள், கிருமிநாசினி பொருட்களை இஸ்ரோ உற்பத்தி செய்து வருவதாகவும் கூறினார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்படுத்தி வருகிறது.
அதற்காக இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேர், ரஷியாவில் உள்ள யூரி ககாரின் என்ற பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியை தொடங்கினார்கள். 16 மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments