இண்டிகோ நிறுவன ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு - பிடிஐ

0 1637

சென்னை விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்த தனது நிறுவன ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக, இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த அவருக்கு முதலில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் நோய்த்தொற்று உறுதியாகி இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு இருந்தனர்.

இந்நிலையில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இறந்தவரின் உடலை மூலகொத்தளம் இடுகாட்டில் புதைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இடுகாட்டின் முன்பு கூடினார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments