மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பணிக்குத் திரும்ப பிரதமர் உத்தரவு

0 1288

மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நாளை முதல் பணிக்குத் திரும்பும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பணிகள் அல்லாத அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோரும் தொடர்ச்சியாக பலமணி நேரம் பணியில் இருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அனைத்து அமைச்சகங்களும் ஊழியர்கள் வர இயலாத நிலையில் 3 முதல் 5 சதவீத ஊழியர்களுடனே இயங்கி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments