தெலுங்கானாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு
தெலுங்கானாவில் வருகிற 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர். நிலைமையின் தீவிரம் கருதியும், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
இதே போன்று ஆந்திராவும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.பிரதமரின் முடிவுக்கு ஏற்ப ஊரடங்கை நீடிப்பது குறித்து அறிவிப்பதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
Comments